நீதான்யா சூப்பர்ஸ்டார்.. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி.. 3 தரமான அணிகளுடன் சம்பவம் செய்த சுட்டிப்பையன்! | Vaibhav Suryavanshi: Vaibhav Suryavanshi attains a superstar stature after scored a fantastic runs against CSK, MI and RCB in the IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

மும்பை: சிஎஸ்கே, மும்பை மற்றும் ஆர்சிபி ஆகிய 3 பெரிய அணிகளுக்கு எதிராகவும் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடி அசத்தி இருக்கிறார். இதனால் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் பேட்ஸ்மேனாக வைபவ் சூர்யவன்ஷி உருவாகிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது.

Vaibhav Suryavanshi

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக வைபவ் சூர்யவன்ஷி அமைந்தார். சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 78 ரன்களை குவித்தார். பவுண்டரி மற்றும் சிக்சரில் மட்டுமே 74 ரன்களை சேர்த்திருக்கிறார். மீதமுள்ள 4 ரன்களை மட்டுமே சூர்யவன்ஷி ஓடி எடுத்திருக்கிறார்.

டிஃபெண்டிங் சாம்பியனான ஆர்சிபி அணியின் பவுலிங் பலமாக இருந்தது. ஹேசல்வுட் கம்பேக் காரணமாக கூடுதல் பலம் பெற்றது. ஆனால் கொஞ்சம் கூட அசராமல், வைபவ் சூர்யவன்ஷி வெளுத்து கட்டியுள்ளார். ஹேசல்வுட்டின் ஒரே ஓவரில் 18 ரன்களை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா, அபினந்தன் சிங், டிம் டேவிட் உள்ளிட்ட பவுலர்களை வெளுத்து கட்டினார்.

இந்தப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 15 பந்துகளில் அரைசதம் விளாசி இருக்கிறார். ஏற்கனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியிலும் 15 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம் அடித்திருந்தார். அதேபோல் மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் 14 பந்துகளில் 39 ரன்களை குவித்தார். ஐபிஎல் தொடரின் 3 பெரிய அணிகளுக்கு எதிராகவும் 15 வயதிலேயே வைபவ் சூர்யவன்ஷி சம்பவம் செய்துள்ளார்.

அதேபோல் ஜாம்பவான் பவுலர்களான முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், பும்ரா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா உள்ளிட்ட பலரையும் வெளுத்து வாங்கியுள்ளார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி 15 வயதிலேயே இந்தியாவின் சூப்பர்ஸ்டார் பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தை எட்டிவிட்டதாக பார்க்கப்படுகிறது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/vaibhav-suryavanshi-vaibhav-suryavanshi-attains-a-superstar-stature-after-scored-a-fantastic-runs-a-788865.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo