
International
oi-Halley Karthik
லண்டன்: பணியிடங்களில், சக பணியாளரை வயதை குறிப்பிட்டு அழைப்பது என்பது மரியாதையான விஷயம் அல்ல. பிரிட்டனில் இந்திய நர்ஸ் ஒருவர் இந்த பிரச்சனையை எதிர்கொண்ட நிலையில், அவருக்கு ஆதரவாக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கொடுத்திருக்கிறது.
பணியிடங்களில் ஒழுக்கம் பின்பற்றப்பட வேண்டும். அதுவும் மருத்துவம் போன்ற துறைகளில், பணியாளர்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், 61 வயதான இல்டா எஸ்டீவ்ஸ். இவர் பிரிட்டனின் அரசு சுகாதார துறையில், நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றி வரும் கானா நாட்டை பூர்வீகமாக கொண்ட மற்றொரு செவிலியர், இல்டாவை ஆண்ட்டி என்று பணியிடத்தில் கூப்பிட்டு வந்திருக்கிறார். இதை கொஞ்சமும் விரும்பாத இல்டா, “நான் உன்னை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவள், எனவே மேடம் என்று கூப்பிடு. அல்லது பெயரிட்டு கூப்பிடு” என்று கூறியிருக்கிறார்.
ஆனால், என்ன சொன்னாலும் கேட்காத சிலர் இருப்பார்களே! அதுபோலதான் கானா நாட்டை சேர்ந்த சக ஊழியரும், எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும், மீண்டும் ஆண்ட்டி, ஆண்ட்டி என்று கூறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆன இல்டா, இப்படியே கூப்பிட்டால் கேஸ் போட்டுவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார். ஆனால், எந்த எச்சரிக்கையும் வேலைக்கு ஆகவில்லை. எனவே சொன்னது போலவே நீதிமன்றத்தை இல்டா நாடினார்.
பணியிடம் என்பது மரியாதைக்கான இடம். அங்கு வந்து, வயதை குறிப்பிடும் வகையில், சக பணியாளர்களை ஆண்ட்டி என்றோ, அங்கிள் என்றோ, தாத்தா, பாட்டி என்றோ அழைப்பதை ஏற்க முடியாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது. விசாரணையின் முடிவில், பணியிடத்தில் மரியாதை ரொம்பவும் முக்கியம், அந்த வகையில், மரியாதைகுறைவாக ஆண்ட்டி என்று அழைத்த சக செவிலியருக்கு ரூ.1.75 அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டப்பட்டது.
என்னடா இது, ஆண்ட்டி-னு கூப்பிட்டது தப்பா? என கொந்தளித்த சக செவிலியர், உடனடியாக உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கும் விசாரணைக்கு வந்த நிலையில், தற்போது நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முந்தைய விசாரணை நீதிமன்றம் கொடுத்த உத்தரவு சரியானதுதான் என்று, மேல்முறையீட்டில் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. மேலும் அபராத தொகை முழுவதும், இந்திய வம்சாவளி நர்ஸ் இல்டாவுக்கு சேர வேண்டும் என்றும் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கு தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/indian-origin-worker-wins-harassment-case-in-uk-over-auntie-remark-788761.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
