
International
oi-Prasanna Venkatesh
ஒருபக்கம் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தானில் உச்சக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், மறுமுனையில் லெபனான் மீது கண்மூடித்தனமாக இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்த தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரணம், ஈரான் விடுத்துள்ள கண்டிஷன், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் எவ்விதமான முன்னேற்றமும் இருக்காது என அறிவித்துள்ளது.
லெபனான் தரப்பில் வெளியிட்டுள்ள தகவல்படி, ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல் மூலம் இதுவரையில் கிட்டத்தட்ட 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். 6,300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான பிறகு நடைப்பெற்ற புதன்கிழமை தாக்குதல்களில் மட்டும் 357 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேலிடம் கோரிக்கை
அமெரிக்கா மற்றும் லெபனான் நாடுகள், இஸ்ரேலை ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளன. இந்தக் கோரிக்கை அடுத்த வாரம் வாஷிங்டனில் தொடங்கவிருக்கும் லெபனான் – இஸ்ரேல் நேரடி பேச்சுவார்த்தைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தை அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு மத்தியில் நடைபெற உள்ளன. இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
முதல் போன் கால்
வெள்ளிக்கிழமை லெபனான் மற்றும் இஸ்ரேல் தரப்புகள் வாஷிங்டனில் உள்ள தங்கள் தூதரங்கள் மூலம் மிகவும் அரிதான வகையில் நேரடி தொலைபேசி உரையாடலை நடத்தின. இந்த உரையாடலின் முடிவில் இரு நாடுகளும் அமெரிக்காவை மீடியேட்டராக வைத்து ஏப்ரல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள் தலைமையில் முறையான சந்திப்பை நடத்த ஒப்புக்கொண்டன. இது போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
பாசிட்டிவ் சிக்னல்
லெபனான் தரப்பு இஸ்ரேலை செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைக்கு முன் ஒரு பாசிட்டிவ் சிக்னலாக தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தமாறு கேட்டுள்ளது. அமெரிக்கா இந்தக் கோரிக்கையை ஆதரிப்பதாகவும், இஸ்ரேல் சாதகமான பதிலை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன.
இருப்பினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுபற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இஸ்ரேல் தற்போது ஹிஸ்புல்லாவை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறுகிறது.
ஈரான் எதிர்ப்பு
ஈரான் தரப்பு, லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் அமெரிக்காவுடன் ஈரான் ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாகக் கூறுகிறது. இந்த உடன்பாடு மத்திய கிழக்கு முழுவதும் பரவிய போரை நிறுத்தும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டது. ஆனால் அமெரிக்கா இந்த உடன்பாட்டில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்வும், இஸ்ரேல் தாக்குதல் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.
இதை ஈரான் கடுமையாக வெள்ளிக்கிழமை மறுத்த காரணத்தால் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகம் தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரேல் தூதரின் நிலைப்பாடு
இஸ்ரேல் தூதர் யெச்சியெல் லைட்டர் (Yechiel Leiter), லெபனானுடன் அமைதி உடன்பாட்டை எட்ட முழு விருப்பம் உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் ஹிஸ்புல்லாவுடன் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க மாட்டோம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்த நிலைப்பாடு பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் சவால்களை உருவாக்கும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/us-and-lebanon-urge-israel-to-pause-hezbollah-attacks-before-historic-direct-talks-in-washington-on-788969.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.


