சிஎஸ்கே அணிக்காக முதல் சம்பவம்.. 26 பந்துகளில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன்.. இனிதான் ஆட்டமே இருக்கு | Sanju Samson: Sanju Samson scored his first fifty for CSK in just 26 balls with 9 Boundaries against Delhi Capitals at Chepauk in IPL 2026

Cricket

oi-Yogeshwaran Moorthi

சென்னை: சிஎஸ்கே அணிக்காக நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் முதல் அரைசதத்தை விளாசி இருக்கிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட அரைசதத்தை எட்டினார். கடந்த 3 போட்டிகளாக சொதப்பிய சஞ்சு சாம்சன், இந்த போட்டியில் ஃபார்முக்கு வந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் – ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாட, சஞ்சு சாம்சன் முதல் ஓவரிலேயே பவுண்டரிகளை விளாசினார்.

Sanju Samson

ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தது ஒரு பவுண்டரியை சஞ்சு சாம்சன் விளாச தொடங்கினார். அதிலும் அக்சர் படேல் மற்றும் இங்கிடி ஆகியோரின் பவுலிங்கில் 2 பவுண்டரிகளை விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 61 ரன்களாக உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.

சிஎஸ்கே அணிக்காக சஞ்சு சாம்சன் அடிக்கும் முதல் அரைசதம் இதுவாகும். கடந்த 3 போட்டிகளாக சஞ்சு சாம்சன் இரட்டை இலக்க ஸ்கோரையே எட்டவில்லை. இதனால் கடந்தப் போட்டிக்கு பின் சஞ்சு சாம்சன் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து சஞ்சு சாம்சன் வாக்கு செலுத்துவதற்காக சொந்த ஊர்க்கு சென்றுவிட்டு வந்தார்.

அதேபோல் சிஎஸ்கே வீரர்களுக்கு நல்ல ஓய்வும் கிடைத்தது. சுமார் ஒரு வாரத்திற்கு பின் கம்பேக் கொடுத்த சஞ்சு சாம்சன், தற்போது அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. ஸ்பின்னர்களை விளாசக் கூடிய சஞ்சு சாம்சன் மிடில் ஓவர்களில் களத்தில் இருந்தால், சிஎஸ்கே அணியால் எளிதாக 220 ரன்களை எட்ட முடியும்.

இதனால் சஞ்சு சாம்சன் கடைசி வரை களத்தில் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் காட்டிய நிதானத்தை இன்றைய ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. இதனால் சஞ்சு சாம்சன் ஃபார்முக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/sanju-samson-sanju-samson-scored-his-first-fifty-for-csk-in-just-26-balls-with-9-boundaries-against-789135.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo