ஈரான் போர் ஆரம்பித்த பின் முதல் முறை நல்ல சம்பவம்.. ஹார்முஸை கடந்த 2 அமெரிக்க போர்க்கப்பல்கள் | A Positive Development over Iran Conflict: Two U.S. Warships Cross the Strait of Hormuz

International

oi-Velmurugan P

தெஹ்ரான்: ஈரான் உடனான போர் தொடங்கிய பிறகு, முதல் முறையாக அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், முதல்முறையாக அமெரிக்கா கப்பல்கள் கடந்துள்ளன. “இந்த முக்கிய கடல்வழிப் பாதையை நாங்கள் சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டோம் (கன்னிவெடிகளை அகற்றுவது)” என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சில மணி நேரங்களில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

அமெரிக்கா ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. அமெரிக்கா உடன் இணைந்து இஸ்ரேலும் ஈரானை தாக்கி வருகிறது. இதில் தெளிவான உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்காவே இஸ்ரேலுக்கு ஆதரவாகவே போரில் இறங்கி உள்ளது. நேரடியாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் பெரிய பிரச்சனைகள் இல்லை.. ஆனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பெரிய பிரச்சனை ஓடுகிறது. பாலஸ்தீனம், லெபனான், ஏமன் போன்ற நாடுகளால் இஸ்ரேலுக்கு வரும் தொல்லைக்கு ஈரான் காரணம் என நினைக்கிறது. அதனால் ஈரானை இஸ்ரேல் தாக்கியது. அதற்கு ஆதரவாக அமெரிக்கா தாக்கியது. பதிலுக்கு ஈரானும் தாக்கியது. அத்துடன் ஈரான் உலக கச்சா எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது. அந்த முடக்கத்தை நிறுத்தவே அமெரிக்கா இப்போத பல வழிகளில் முயன்று வருகிறது.

A Positive Development over Iran Conflict Two U S Warships Cross the Strait of Hormuz

இந்த சூழலில் ஈரான் உடனான போர் தொடங்கிய பிறகு, முதல் முறையாக அமெரிக்காவின் இரண்டு போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன. அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தாங்கி அழிக்கும் கப்பல்கள் எந்தவிதமான இடையூறும் இன்றி இந்தப் பாதையைக் கடந்ததாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த ஆபத்தான ராணுவ நடவடிக்கை குறித்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அந்நாட்டு அதிகாரிகளிடம் எந்தவித ஆலோசனையும் அமெரிக்கா செய்யாமலேயே கடந்ததாக தெரிகிறது.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “நாங்கள் இப்போது ஹார்முஸ் ஜலசந்தியைச் சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கிவிட்டோம். சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இதைச் செய்யும் தைரியமோ அல்லது மனமோ கிடையாது. அவர்களுக்கு ஒரு உதவியாகத்தான் இதை நாங்கள் செய்கிறோம்.” என்றார்.

மேலும், இந்தப் போரில் ஈரான் படுதோல்வியைச் சந்தித்து வருவதாகவும், கடலில் ஈரான் விரித்து வைத்துள்ள கண்ணிவெடிகளால் மட்டுமே இனி கப்பல்களுக்குச் சிறு அச்சுறுத்தல் இருக்கக்கூடும் என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

உலக எண்ணெய் விநியோகத்தில் 20% செல்லும் ஹார்முஸ் பாதையை ஈரான் திறக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான நிபந்தனையாக பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முன் வைத்து வருகிறது. அதேநேரம் போர்க்கப்பல்கள் கடலில் சீறிக்கொண்டிருக்க, மறுபுறம் பாகிஸ்தானில் ஈரான் மற்றும் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் சனிக்கிழமை முதல் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் , “இரு தரப்புப் பிரதிநிதிகளும் ஆக்கபூர்வமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான உறுதிப்பாட்டைப் பாராட்டிய பிரதமர், இந்தப் பேச்சுவார்த்தைகள் இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு படிக்கல்லாக அமையும் ” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் பிராந்தியத்தில் நிலையான அ மைதியை நோக்கிய முன்னேற்றத்தை அடைவதில், இரு தரப்பினருக்கும் தொடர்ந்து உதவிகளை வழங்க பாகிஸ்தான் ஆவலுடன் காத்திருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் வலியுறுத்தினார்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/a-positive-development-over-iran-conflict-two-u-s-warships-cross-the-strait-of-hormuz-789165.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo