
Tamilnadu
oi-Hema Vandhana
பெரம்பலூர்: பெரம்பலூரை அதிரவைத்த இளம்பெண் கொலை சம்பவம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.. கள்ளக்காதல் தகராறு எவ்வளவு ஆபத்தான திருப்பத்தை எடுக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக மாறியுள்ளது.. காதலியின் மரணத்திற்குப் பிறகும் நடந்த அதிர்ச்சி செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது..
கொலை செய்தவர் தானே போலீசுக்கு தகவல் அளித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது..இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது..
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா, புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி 28 வயதான நந்தினி. இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரியசாமி உயிரிழந்த நிலையில், தனது மூன்று குழந்தைகளையும் மாமியாரின் பொறுப்பில் விட்டுவிட்டு, நந்தினி பெரம்பலூரில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
பச்சமுத்துவின் காதல்
அங்கு வேலை பார்த்து வந்தபோது, அதே ஊரைச் சேர்ந்த 33 வயதான பச்சமுத்து என்பவருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
இதற்கிடையில், பச்சமுத்துவின் மனைவி சத்யாவுக்கு இந்தத் தொடர்பு குறித்துத் தெரியவரவே, அவர் தனது கணவரைக் கண்டித்துள்ளார். ஆனால் பச்சமுத்து தனது கள்ள உறவைக் கைவிடவில்லை. இதனால் மனமுடைந்த சத்யா, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சத்யாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
வாடகை வீட்டில் நிகழ்ந்த பயங்கரம்
மனைவியின் மறைவுக்குப் பிறகும் நந்தினியுடனான தொடர்பை பச்சமுத்து தொடர்ந்தார். 2 பேரும அடிக்கடி தனிமையில் சந்திப்பதற்காக, பெரம்பலூர் பாரதிதாசன் நகர் 4வது குறுக்குத் தெருவில் நந்தினியை ஒரு வாடகை வீட்டில் பச்சமுத்து தங்க வைத்துள்ளார். கடந்த ஒரு மாதமாக நந்தினி அங்கு தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், நந்தினி வேறு சில ஆண்களுடனும் செல்போனில் பேசி வருவதாக பச்சமுத்துவுக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு, நந்தினியின் வீட்டுக்குச் சென்ற பச்சமுத்து, அங்கேயே தங்கியுள்ளார். அப்போது நந்தினியின் செல்போன் தொடர்புகள் குறித்து மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளது. “மற்ற ஆண்களுடன் பேசுவதை நிறுத்திக்கொள்” என்று பச்சமுத்து மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தினிக்கும் அவருக்கும் இடையே மோதல் முற்றவே, ஆத்திரத்தின் உச்சியில் பச்சமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியின் கழுத்தை அறுத்துள்ளார்.
சடலத்துடன் சில மணிநேரம்..
ரத்த வெள்ளத்தில் துடித்த நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை செய்த வேகத்தில் அங்கிருந்து தப்பியோடாத பச்சமுத்து, நந்தினியின் சடலத்துடனேயே சில மணிநேரம் அந்த வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அதிகாலையில் பெரம்பலூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்த அவர், “நந்தினியை நான்தான் கொலை செய்தேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து தலைமறைவானார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், நந்தினியின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த பச்சமுத்துவை தேடிப் பிடித்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட அதிர்ச்சி வாக்குமூலங்களைத் தந்துள்ளார்.
பச்சமுத்துவின் மனைவி சத்யா ஏற்கனவே தற்கொலை செய்துகொண்டதால் தாயை இழந்துவிட்டனர்.. இப்போது தந்தை பச்சமுத்துவும் கொலைக் குற்றத்திற்காகச் சிறைக்குச் சென்றுவிட்டதால், அவருடைய 2 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்..
நந்தினியின் குழந்தைகள்: நந்தினியின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.. இப்போது நந்தினியும் கொலை செய்யப்பட்டுவிட்டதால், அவருடைய 3 குழந்தைகள் தாயையும் இழந்து தவிக்கின்றனர்.. ஆக 5 குழந்தைகளும் தாய், தகப்பனின்றி தவிக்கிறார்கள்…!!
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/the-secret-inside-nandhini-s-phone-why-a-perambalur-rented-house-turned-into-a-bloody-crime-scene-789179.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
