
International
oi-Halley Karthik
இஸ்லாமாபாத்: மொத்த உலகமும் எதிர்பார்த்திருந்த, ஈரான்-அமெரிக்கா இடையேயான இஸ்லாமாபாத் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 21 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் டிரம்ப்தான் சொதப்பியதாக சொல்லப்படுகிறது.
டிரம்ப் நினைத்திருந்தால் பேச்சுவார்த்தையை ஸ்மூத்தாக கொண்டு போய் இருந்திருக்க முடியும். ஆனால், அமெரிக்காவுக்கு என்னைக்கு அப்படி தோன்றியிருக்கிறது? எனவே இந்த முறையும் ஜவ்வாக இழுத்து.. கடைசியில் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கிறது.

பேச்சுவார்த்தையும் அமெரிக்காவும்
அமெரிக்காவை பொறுத்தவரை, ஈரான் என்பது வேலியில் போகிற ஓணானை பிடித்து, ஈர வேட்டிக்குள் விட்ட கதைதான். எனவே, விஷயத்தை ஊதி பெரியதாக்க நேட்டோவிடம் டிரம்ப் அடி போட்டிருந்தார். உஷாரான நேட்டோ ஜகா வாங்கிக்கொண்டது. தற்போது அமெரிக்கா தனித்துவிடப்பட்டிருப்பதால், பேச்சுவார்த்தையை கையில் எடுத்தது. இப்படியாக இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தை கடைசியில் சொதப்பியது.
பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை எப்படி போனது?
இதற்கு முதல் காரணம் அணுசக்தி விஷயம்தான். ஈராக்கில் ஆபத்தான ஆயுதங்கள் இருக்கிறது என்று சொல்லி வான்டடாக போய் சண்டை செய்ததை போல, ஈரானிலும் அணு ஆயுதம் இருக்கிறது என்றுதான் இந்த போரை டிரம்ப் தொடர்ந்திருந்தார். ஆனால், அப்படியான எந்த ஆயுதங்களும் இல்லை என்பது மொத்த உலகத்திற்கும் தெரிந்துவிட்டது. இருப்பினும் யுரேனியத்தை செறிவூட்டும் கருவிகளுக்கு அமெரிக்கா அதிக கட்டுப்பாடுகளை விதித்தது. இதனை ஈரான் ஏற்கவில்லை.
சொத்துக்களை விடுவித்தல்
சரி போகட்டும் என இரண்டாவது டிமாண்ட் பற்றி விவாதங்கள் எழுந்தன. வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும். குறிப்பாக கத்தாரில் உள்ள நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று ஈரான் கேட்டது. ஈரான் சொன்னதை பாகிஸ்தான் அதிகாரிகள், அமெரிக்க குழுவிடம் விரிவாக சொன்னார்கள். எல்லாவற்றையும் வாயை பொளந்து கேட்டுக்கொண்ட அமெரிக்கா குழு, கடைசியில் ‘வாய்ப்பில்லை ராஜா’ என்று சொல்லிவிட்டது.
சுங்க கட்டணம்
இந்த இரண்டு கோரிக்கைகளில் உடன்பாடு எட்டப்படாததால், அடுத்து வரும் கோரிக்கைகள் எல்லாம் முழுமையான பரிசீலனைக்கு உடன்படாமலேயே மேம்போக்காக கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஹார்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம் வசூலிப்போம் என்று ஈரான் சொல்ல, அதை காதில் வாங்காமல்.. நீரிணை வழியாக முழுமையான போக்குவரத்துக்கு அனுமதி வேண்டும் என்று மொட்டையாக பேசியிருக்கிறது அமெரிக்க குழு.
புரிதல் இல்லாத பேச்சுவார்த்தை
இப்படியாக 4வது டிமாண்ட்டை விவாதிக்கும் கட்டத்திற்கு வந்தது சேர்ந்தது பேச்சுவார்த்தை குழு. போரை நிறுத்த வேண்டும், குறிப்பாக லெபனானிலும் போர் நிறுத்தம் வேண்டும். போரில் இதுவரை அமெரிக்கா ஏற்படுத்திய சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ஈரான் சொல்ல.. அணுசக்தி பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து மட்டுமே அமெரிக்க குழு பேசியது.
டென்ஷன் ஆன அமெரிக்கா
அவ்வளவுதான், இது தேறாது என்று இரு நாட்டு குழுவும் முடிவெடுத்த நிலையில், 5வது கோரிக்கையையும் பேசிவிடுவது என்று யோசித்து, அதையும் பேசினார்கள். ஆனால், பேச்சுவார்த்தைக்கு வந்த ஈரான் குழுவினர், போரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களை நினைவுகூறும் விதமாக உடை அணிந்து வந்திருந்தனர். இதை கொஞ்சமும் ரசிக்காத அமெரிக்கா, அப்படியே பேச்சுவார்த்தையை துண்டித்துக்கொண்டது. இப்படியாக அமைதி பேச்சுவார்த்தை தோல்வியைடைந்தது.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/trump-islamabad-talks-failure-5-key-reasons-why-trump-completely-messed-up-the-negotiations-789319.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.



