
Business
oi-Prasanna Venkatesh
சென்னை: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பாகிஸ்தானில் கடந்த 21-ந்தேதி நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. அமெரிக்க துணைத் தலைவர் ஜேடி வேன்ஸ், இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்தார். இதேவேளை, ஈரான் நாடாளுமன்றத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப், அமெரிக்காவால் எங்களுக்கு நம்பிக்கையைப் அளிக்க முடியவில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையில், டொனால்ட் டிரம்ப், ஈரான் துறைமுகங்களுக்கு உள்ளே வரும் மற்றும் வெளியேறும் அனைத்து கடல் போக்குவரத்தையும் தடுக்க அமெரிக்க கடற்படை நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதனை யுனைடெட் ஸ்டேட்ஸ் சென்ட்ரல் கமாண்ட் ஏப்ரல் 13ஆம் தேதி காலை 10 மணி (ET) முதல் அமல்படுத்தியது என அறிவித்துள்ளது.

இந்த பதற்றத்திற்கு மத்தியில் தங்கம். வெள்ளி விலை பெரும் ஆட்டத்தை கண்டுள்ளது, எதிர்பார்த்தப்படியே இந்தியாவில் விடியும் முன்பே ஆசிய சந்தைய துவக்கத்தில் ஏற்பட்ட தாக்கம் தற்போது சர்வதேச சந்தையில் பெரும் சரிவை வர்த்தகத்தின் துவக்கத்திலேயே பதிவு செய்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவோருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது, ஆனால் ஏற்கனவே அதிகப்படியான விலையில் தங்கம் வாங்கி வைத்தவர்களுக்கு இது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம்-வெள்ளி விலை சரிவு
ஏப்ரல் 13 திங்கட்கிழமை சர்வதேச சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் எதிர்பார்த்தப்படியே அமெரிக்க டாலர் வலுவடைந்ததும், பத்திர முதலீட்டு உயர்ந்து அதன் லாப அளவுகள் அதிகரித்தது. அதேவேளையில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல மேற்கு ஆசியாவில் அதிகரித்த போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இந்த 3 முக்கிய காரணமாக தங்கம், வெள்ளி பாதுகாப்பான சொத்து என்ற அந்தஸ்தை இழந்து வெறும் உலோகமாக கருதி இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. பணவீக்கம் தொடர்ந்து உயரும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை பாதித்துள்ளது. இதனால் தங்கம் போன்ற வருமானம் தராத சொத்துகளின் மீதான ஈர்ப்பு குறைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
COMEX தங்க ஃபியூச்சர்ஸ் 1.1 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸுக்கு 4,734.60 டாலராக வர்த்தகமானது. வெள்ளி ஃபியூச்சர்ஸ் 2.63 சதவீதம் குறைந்து 74.47 டாலருக்கு வந்தது.
இதேபோல் சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் 0.50 சதவீதம் குறைந்து 4,722.02 டாலராகவும், ஸ்பாட் வெள்ளி விலை 2.22 சதவீதம் சரிந்து 74.2175 டாலராகவும் இருந்தது. இந்த விலை குறைவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளது.
முக்கிய நெருக்கடி
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் பணவீக்கம் தொடர்ந்து உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகளவில் உயர்த்த வேண்டிய நிலையில் வைத்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலை தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீட்டு சொத்துகளின் மீதான தேவையை தற்காலிகமாக குறைத்துள்ளது.
அமெரிக்க டாலர் மற்றும் பத்திர முதலீடு
அமெரிக்க டாலர் வலுவடைந்ததும் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. வலுவான டாலர் எப்போதும் தங்கம் – வெள்ளிக்கு எதிரி. அதே சமயம் டாலர் உயர்வால் தானாக அமெரிக்க பத்திர முதலீடுகள் லாபகரமாக மாறும், பத்திரங்கள் அதிகப்படியான முதலீட்டை ஈர்த்துள்ள காரணத்தால் முதலீட்டு சந்தை இன்று தலைகீழாக மாறியுள்ளது.
இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி விலைப் போக்கை முறையாக கவனித்து முதலீடு செய்ய திட்டமிட வேண்டும் அல்லது ஏற்கனவே செய்த முதலீட்டை வெளியேற்ற வேண்டும்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/gold-and-silver-prices-drop-sharply-on-april-13-us-iran-talks-fails-war-tension-raise-stronger-789485.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
