அசராத சீனா.. டிரம்ப் 50% வரி விதிப்பேன் என சொல்லியும்.. விரைவில் ‘தீபாவளி’ பரிசு! | Trump 50% Tariff Threat on China Over Iran Arms: Shanghai Composite Dips Just 0.39% Despite US Naval Blockade Tensions

International

oi-Prasanna Venkatesh

அமெரிக்கா – ஈரான் போர் மத்தியில் சைலெண்டாக மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது சீனா, ஈரானுக்கு வர்த்தகம் மூலம் தொடர்ந்து நிதியுதவி அளிப்பதில் துவங்கி ஐநா-வில் ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவை சீனா தனது வீட்டோ பவர் பயன்படுத்தி தடுத்தது வரையில் பல வகையில் ஈரானுக்கு துணையாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் நிற்கிறது சீனா.

இந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் உடனான போர் நிறுத்தம் அறிவித்த பின்பு, ஈரானுக்கு ராணுவ ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்தார், மேலும் இதை உடனடியாக அமலாக்கம் செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மூலம் சீனா-வை மறைமுகமாக டார்கெட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

China Trump Stock market 50 Trump 50 Tariff China Shanghai Composite Today China Arms to Iran US Iran Ceasefire Tensions Trump Xi Jinping Visit Trump 50 tariff threat China Shanghai Composite April 13 China supplying weapons to Iran MANPAD air defence to Iran US intelligence China Iran Trump offers oil to China Venezuelan crude to China Shanghai Composite falls 0 39 China role in US-Iran ceasefire Trump visit to China next month Shanghai Composite yearly gain US naval blockade Iran ports Fox News China Iran report CNN China MANPAD news Shanghai Composite resilience 2026 50 13 MANPAD 0 39 MANPAD 2026

இந்த வரி விதிப்பால் திங்கள்கிழமை பங்குச்சந்தை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சீனாவின் முக்கிய பங்குச்சந்தை சிறிய சரிவுடன் வர்த்தகமானது. ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் காலை நேரத்தில் வெறும் 0.39 சதவீதம் சரிந்து 3,971 புள்ளிகளில் வர்த்தகமானது. ஆனால் அடுத்த ஒரு மணிநேரத்தில் அனைத்து முக்கிய குறியீடுகளும் உயர்வுடன் வர்த்தகமாக துவங்கியது.

இதனால் அமெரிக்காவின் வரி விதிப்பு பதற்றம் துளியும் இல்லாமல் சீன சந்தை வர்த்தகமாகி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் ஷாங்காய் காம்போசிட் இன்டெக்ஸ் 2.80 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தாலும், கடந்த ஆண்டை விட 21.69 சதவீதம் அதிகமாகவே உள்ளது.

அமெரிக்கா-ஈரான் பதற்றத்தின் தாக்கம்

அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தம் எட்ட முடியாமல் தோல்வியடைந்த பிறகு, அமெரிக்க கடற்படை ஈரானிய துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற பேச்சுகள் வெற்றி பெறாததால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்கா. இந்த நிலையில் சீன பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

சீனாவுக்கு 50% வரி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை ஈரானுக்கு எதிரான எச்சரிக்கைகளை வீடுத்தார். அதே நேரத்தில் சீனாவையும் குறிவைத்து பேசினார். அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகளின்படி, சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்க தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக டிரம்ப் சீனா மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது சர்வதேச வர்த்தகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

உளவுத்துறை தகவல்

அமெரிக்க உளவுத்துறை முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. சீனா அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு புதிய வான்பாதுகாப்பு அமைப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக CNN செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தது.

குறிப்பாக MANPAD எனப்படும் தோளில் தூக்கிச் செல்லும் வகையிலான சிறிய ஏவுகணை அமைப்புகளை அனுப்ப ஏற்பாடுகள் நடைபெறுவதாக உளவு அறிக்கைகள் கூறுகின்றன. இந்த ஏவுகணைகள் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் ஆகும். இது ஈரானுக்கு மிகப்பெரிய தீபாவளி பரிசாக இருக்கும்.

மூன்றாம் நாடுகள் டார்கெட்

சீனா இந்த ஆயுதங்களை நேரடியாக அனுப்பாமல் மூன்றாம் நாடுகள் வழியாக ரகசியமாக அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஏற்றுமதியின் உண்மையான இடத்தை அதாவது தயாரிப்பு, ஷிப்பிங் செய்யப்படும் இடத்தை மறைக்க முயற்சி செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான்-அமெரிக்கா இடையேயான இரு வார இடைக்கால போர் நிறுத்தம் கடந்த புதன்கிழமை தொடங்கிய நிலையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

China Trump Stock market 50 Trump 50 Tariff China Shanghai Composite Today China Arms to Iran US Iran Ceasefire Tensions Trump Xi Jinping Visit Trump 50 tariff threat China Shanghai Composite April 13 China supplying weapons to Iran MANPAD air defence to Iran US intelligence China Iran Trump offers oil to China Venezuelan crude to China Shanghai Composite falls 0 39 China role in US-Iran ceasefire Trump visit to China next month Shanghai Composite yearly gain US naval blockade Iran ports Fox News China Iran report CNN China MANPAD news Shanghai Composite resilience 2026 50 13 MANPAD 0 39 MANPAD 2026

டிரம்ப்-ன் சலுகை

சீனா ஈரானுக்கு ஆயுதம் ஏற்றுமதி செய்வது, டிபம்ப் 50 சதவீத வரி விதிப்பது போன்ற அறிவிப்புக்கு மத்தியிலும் டிரம்ப் சீனாவை நேரடியாகவும், கடுமையாகவும் கண்டிக்க முடியாத நிலையில் உள்ளார்.

சீனாவின் ஆயுத ஏற்றுமதி குறித்து பேசிய டிரம்ப், சீனா இத்தகைய செயலை செய்யாது என நம்புகிறேன் என கூறியதுடன் அமெரிக்கா சீனாவுக்கு உள்நாட்டு எண்ணெய் மற்றும் வெனிசுவேலா எண்ணெயை வழங்க தயாராக இருப்பதாகக் கூறினார். வெனிசுவேலா மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டை கைப்பற்றிய நிலையில் இத்தகைய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மறுபுறம் சீனா, ஈரான்-அமெரிக்க இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் தான் முக்கிய பங்கு வகித்துள்ளது.

சீனா சுற்றுப்பணம்

இத்தகைய சூழ்நிலையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் டிரம்ப் சீனாவுக்கு செல்ல உள்ளார். இந்த பயணத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் எப்படி மாறும் என்பது முதலீட்டாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/trump-50-tariff-threat-on-china-over-iran-arms-shanghai-composite-dips-just-0-39-despite-us-naval-789549.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo