இந்தோனேஷியா மர்மம்! 40 கோடி வருஷமா எங்கே ஒளிஞ்சிருந்தது? உலகையே மிரள வைக்கும் அந்த விசித்திர உருவம் | Indonesia Mystery! Where Was It Hidden for 400 Million Years? The Strange Creature That’s Shocking the World!

International

oi-Hema Vandhana

ஜாகர்த்தா: இந்தோனேஷியா ஆழ்கடல் பகுதியில் “டைனோசர் காலத்து மீன்” என்று அழைக்கப்படும் “சிலகாந்த்” (Coelacanth) மீன் சிக்கியதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.. சுமார் 40 கோடி வருஷத்துக்கு முன்பிருந்தே இந்த பூமியில் வாழ்ந்து வரும் மிகப் பழமையான உயிரினங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சிலகாந்த் மீன் என்றால் என்ன? அதன் ஸ்பெஷாலிட்டி என்ன? தற்போது இந்தோனேஷியா கடலில் உள்ளதா? என்பதை பற்றியெல்லாம் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

டைனோசர்கள் காலத்திலும் இந்த மீன் இனம் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் சொல்வதால், இதை Living Fossil அதாவது “வாழும் புதைபடிவம்” என்றும் அழைக்கிறார்கள்..

Coelacanth fish

40 கோடி வருஷ மரம்ம்

சிலகாந்த் என்ற விசித்திர மீன், சாதாரண மீன்களைப் போல கிடையாது.. இது ஆழ்கடலில் வாழும் ஒரு மர்மமான இனம்.. இதன் உடல் அமைப்பு பார்ப்பதற்கே மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

சாதாரண துடுப்புகளுக்கு பதிலாக, கால்களை போன்ற தடிமனான துடுப்புகள் இதற்கு இருப்பதே இதன் மிகப் பெரிய ஸ்பெஷலாகம்.. ஒரு காலத்தில் இந்த மீன் இனம் முற்றிலும் அழிந்துவிட்டது என்றுதான் விஞ்ஞானிகள் நம்பி கொண்டிருந்தனர்.. ஆனால், 1938ம் ஆண்டு ஆப்பிரிக்க கடல் பகுதியில் இது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது உலகையே அதிர வைத்தது.. அதன் பிறகு இந்தோனேஷியா அருகே ஒரு சில இடங்களில் மட்டும் மிக அரிதாக இது தென்பட்டுள்ளது..

பரவும் செய்தி உண்மைதானா?

இப்போது 2026 ஏப்ரல் மாதத்தில், “இந்தோனேஷிய ஆழ்கடலில் புதிய சிலகாந்த் மீன் கண்டுபிடிப்பு” என்று சொல்லி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.. ஆனால், இந்தச் செய்தியின் பின்னணியில் உள்ள உண்மையை நாம் கவனிக்க வேண்டியது அவசியம்..

இந்த விசித்திரக் கண்டுபிடிப்பு குறித்து பிபிசி (BBC), ராய்ட்டர்ஸ் (Reuters) போன்ற உலகின் பெரிய செய்தி நிறுவனங்கள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலையும் வழங்கவில்லை.. அதேபோல், “புதிய கண்டுபிடிப்பு” என்று எந்த ஒரு விஞ்ஞான அமைப்பும் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவில்லை.. எனவே, தற்போது இணையத்தில் பரவும் வீடியோக்கள் பழைய காட்சிகளாகவோ அல்லது வேறு ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்களாகவோ இருக்க வாய்ப்பு உள்ளது..

வரலாற்றில் பெரிய விஷயம்

ஒருவேளை இந்தச் சிலகாந்த் மீன் புதிய இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், அது உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய விஷயமாக கருதப்படும்.. காரணம், பூமியின் பழமையான உயிர் வரலாற்றைப் புரிந்து கொள்ளவும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை ஆராயவும் இது ஒரு முக்கிய ஆதாரமாகத் திகழும்..

சிலகாந்த் மீன் உண்மையில் உலகில் இன்னும் உயிருடன் இருக்கும் ஒரு அதிசய உயிரினம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.. ஆனால் “2026 ஏப்ரல் மாதத்தில் இந்தோனேஷியாவில் புதியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது” என்ற தகவல் தற்போது வரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இதனை இதனை ஒரு உறுதி செய்யப்பட்ட செய்தியாகப் பார்க்காமல், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவும் ஒரு “தகவல்” என்றே நாம் கருத வேண்டும்.. ஆழ்கடலில் இன்னும் எத்தனையோ ரகசியங்கள் இருக்கலாம், ஆனால் அவை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும்போதே உண்மையான வரலாறாக மாறும்..!!!

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/indonesia-mystery-where-was-it-hidden-for-400-million-years-the-strange-creature-that-s-shocking-t-789613.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo