இந்தியாவுக்கு வந்த கேட்ச்-22 சிக்கல்.. இனி அடுத்தடுத்து பிரச்சனை தான்? | India’s Net FDI Turns Deeply Negative in Catch-22 Trap – Massive FDI Shift to US, Mexico, Vietnam & Poland

Business

oi-Prasanna Venkatesh

ஈரான்-அமெரிக்கா இடையேயான பதற்றம் அதிகரித்ததால் திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீடு 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் வர்த்தகம் முடியும் போது 702.68 புள்ளிகள் சரிந்து தற்போது 76,847.57 புள்ளிகளில் வர்த்ககம் முடிவடைந்துள்ளது. நிஃப்டி குறியீடு 207 புள்ளிகள் குறைந்து 23,842 புள்ளிகளில் முடிந்துள்ளது.

இந்த சரிவு பல முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில் இந்தியாவின் அன்னிய முதலீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வழியாக மற்றொரு பிரச்சனை உருவாகியுள்ளது.

FDI investment Economy India Net FDI Negative Catch 22 Indian Economy FII Outflows 1 6 Lakh Crore FDI Shift to Vietnam Mexico FDI 22 FII 1 6 FDI catch 22 india economy explained fii outflows 1 6 lakh crore fdi inflows dip india 2026 gross fdi vs net fdi india india fdi shift to us mexico vietnam poland rbi fdi data january 2026 overseas direct investment india rise repatriation disinvestment india iran us tensions stock market impact india economy catch 22 situation foreign investment outflow india india fdi negative 2026 fdi 2026 22 fii 1 6 fdi 2026 fdi vs fdi fdi rbi fdi 2026 22 fdi 2026

FII தொடர்ந்து விற்பனை

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) இந்தியப் பங்குகளை பெருமளவு விற்று வருகின்றனர். மார்ச் 2 முதல் ஏப்ரல் 9 வரை 25 வர்த்தக நாட்களில் மட்டும் சுமார் ரூ.1.6 லட்சம் கோடிக்கு மேல் விற்பனை செய்துள்ளனர். இந்த விற்பனை அதிகரித்துள்ளதால் முதலீட்டு சந்தை பலவீனமடைந்துள்ளது. இந்திய சந்தையில் முதலீடு செய்வதில் இருந்து FII முதலீட்டாளர்கள் ஒதுங்கி நின்ற நிலையில், இந்திய சந்தை மீதான நம்பிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

FDI முதலீட்டிலும் தடுமாற்றம்

இந்தியப் பொருளாதாரம் தற்போது ஒரு சிக்கலான நிலையில் இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து பணத்தை முதலீடு செய்து கொண்டு வருகின்றன (FDI). ஆனால் அதே நேரத்தில் அதே வெளிநாட்டு நிறுவனங்களே பணத்தை வெளியே எடுத்துச் செல்கின்றன. இந்த வரவு மற்றும் செலவை கழித்துப் பார்த்தால் இறுதி எண்ணிக்கை (NET FDI) குறைந்து வருகிறது. சில மாதங்களில் இது மைனஸ் நிலையிலும் உள்ளது.

ரிசர்வ் வங்கி தரவுகளின்படி ஜனவரி 2026-ல் இந்தியாவில் மொத்த 5.67 பில்லியன் டாலர் மதிப்பிலான FDI முதலீடுகள் குவிந்தது. ஆனால் 4.92 பில்லியன் டாலர் வெளியேறியது. இதனால் நிகர FDI -1.39 பில்லியன் டாலராக எதிர்மறையில் இருந்தது. டிசம்பர் 2025-ல் இது -492 மில்லியன் டாலராக இருந்தது. இது பொருளாதாரத்துக்கு பெரும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

ஒரு பக்கெட்டில் தண்ணீர் ஊற்றினால் அது நிரம்பும். ஆனால் அந்த வாளியில் பெரிய ஓட்டை இருந்தால் தண்ணீர் வெளியேறிவிடும். ஊற்றும் அளவை விட வெளியேறும் அளவு அதிகமானால் வாளி காலியாகிவிடும். இந்தியாவின் வெளிநாட்டு FDI முதலீட்டிலும் இதே நிலைதான் உள்ளது, இதனால் இந்திய பொருளாதாரத்தில் கேட்ச்-22 நிலை ஏற்பட்டு உள்ளது.

‘கேட்ச்-22’ சிக்கல் என்றால் என்ன?

இந்த நிலையை ‘கேட்ச்-22’ என்று அழைக்கிறார்கள். இது ஒரு வகையான சிக்கலான சூழல். எந்த வழியில் சென்றாலும் பிரச்சனை தீராது. ஒரு பக்கம் தீர்க்க முயன்றால் மற்றொரு பக்கம் பிரச்சனை அதிகரிக்கும்.

பொருளாதாரத்தில் இது இப்படி இருக்கும், அரசு பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வட்டி விகிதத்தை குறைக்க விரும்பினால், அது பணவீக்கம் அதிகரிக்கும். மறுபுறம் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தினால் வளர்ச்சி குறையும். எந்த முடிவு எடுத்தாலும் ஒரு பிரச்சனை தீர்ந்தால் மற்றொன்று எழும். இந்தியாவின் FDI நிலையும் இப்படித்தான். மொத்த முதலீடு வருகிறது, ஆனால் நிகர லாபம் குறைகிறது.

புதிய சந்தை

இதேவேளையில் கோவிட் பிறகு உலகளாவிய நிறுவனங்கள் முதலீட்டு இடங்களை மாற்றி வருகின்றன. மெக்சிகோ, வியட்நாம், போலந்து போன்ற நாடுகள் முக்கிய வர்த்தக சந்தைகளுக்கு அருகில் இருப்பதால் அல்லது சிறப்பான வர்த்தக உறவுகள் இருப்பதால் இந்த நாடுகளில் முதலீடு அதிகரித்துள்ளது. அமெரிக்கா குறிப்பாக தொழில்நுட்பத் துறையில் உலகளவில் பெரும் முதலீட்டை ஈர்த்து வருகிறது.

இந்திய நிறுவனங்களும் 2022-ல் விதிகள் தளர்த்தப்பட்டதால், இந்திய நிறுவனங்களும் வெளிநாட்டில் (ODI) அதிக முதலீடு செய்கின்றன. சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்த முதலீடுகளை விற்பனை செய்து லாபத்தை எடுத்துச் செல்கின்றனர் அல்லது தங்களது பங்குகளை விற்கின்றனர். இதனால் பணம் வெளியேறும் அளவு அதிகரிக்கிறது.

பொருளாதாரத்துக்கு என்ன தாக்கம்?

இந்தியா இன்னும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் நாடாக இருந்தாலும், வெளியேறும் பணம் அதிகமாக இருப்பதால் நிகர முதலீட்டு அளவு என்பது பெரிய அளவில் குறைகிறது. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. அன்னிய முதலீடுகளை ஈர்த்து, FII முதலீடுகளை தக்க வைக்க வேண்டும் என்றால் தற்போது சந்தையில் இருக்கும் அனைத்து சவால்களையும் களைந்து இந்திய பொருளாதாரத்தை வேகமாக வளர்ச்சி பாதையில் வைக்க வேண்டும். ஈரான் போர், ரூபாய் மதிப்பு சரிவையும் சேர்த்து.

தற்போதைய சூழலில் உலக அரசியல் பதற்றம், FII விற்பனை மற்றும் FDI நிகர வரவு குறைவு ஆகியவை இணைந்து இந்தியப் பொருளாதாரத்துக்கு கேட்ச்-22 என்ற சோதனையான காலக்கட்டத்தை உருவாக்கியுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/business/indias-net-fdi-turns-deeply-negative-in-catch-22-trap-massive-fdi-shift-to-us-mexico-vietnam-789637.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo