இஸ்ரேல் மிரட்டல்.. அமெரிக்காவின் 3 மணிநேர கெடு.. உச்சக்கட்ட பரபரப்பில் ஈரான்..! | Netanyahu Warns Iran Ceasefire “Could End Quickly” as Trump’s Strait of Hormuz Blockade Begins in Under 3 Hours

International

oi-Prasanna Venkatesh

பாகிஸ்தானில் ஈரான் – அமெரிக்கா மத்தியிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் மீதான போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த ஹார்முஸ் ஜலசந்தி முடக்கும் நடவடிக்கை இன்னும் மூன்று மணி நேரத்துக்குள் தொடங்க உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளும் உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சொல்லி வைத்தது போல் கச்சா எண்ணெய் விலையும் உயர துவங்கியுள்ளது.

Iran War Israel Netanyahu Iran Ceasefire Warning Trump Hormuz Blockade Israel Iran Tensions Today Strait of Hormuz Crisis Middle East Conflict Escalation netanyahu iran ceasefire could end quickly trump hormuz blockade begins in 3 hours israel prime minister iran warning strait of hormuz us blockade today iran israel tensions escalation netanyahu statement on iran ceasefire trump naval blockade hormuz middle east crisis hormuz 2026 iran ceasefire collapse warning us iran conflict update netanyahu trump iran news hormuz strait blockade countdown israel iran war risk global oil route hormuz tension middle east ceasefire breaking news 3

நெதன்யாகுவின் எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அறிக்கையில், ஈரானுடன் தற்போது நடைமுறையில் இருக்கும் 2 வார போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட காலம் நீடிக்காது என்று தெளிவாகக் கூறியுள்ளார். “இந்த போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரலாம்” என கூறிய நிலையில் மத்தியக் கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரிக்கும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது.

பாகிஸ்தான் பேச்சுவாத்தையில் அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் ஏற்க முடியாது என அறிவித்த நிலையில் அமெரிக்கா அடுத்தடுத்து ஈரானை முடக்கும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் போர் தாக்குதல் துவங்கலாம் என நிலை இருந்து வந்த நிலையில் தற்போது பெஞ்சமின் நெதன்யாகு கூறிய வார்த்தைகள் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

டிரம்ப்-ன் 3 மணி நேர கெடு

இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் திட்டத்தை நேற்ரு அறிவித்திருந்தார். இந்த முக்கியமான நீர்வழிப்பாதையில் உலக எண்ணெய் வர்த்தகத்தின் பெரும் பகுதியை நடக்கிறது. இதுவரையில் ஈரான் கச்சா எண்ணெய் மட்டுமாவது சர்வதேச சந்தைக்கு வந்துக்கொண்டு இருந்த நிலையில், தற்போது அமெரிக்க கடற்படை மொத்தமாக முடக்கும் காரணத்தால் வளைகுடாவில் இருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட இனி வெளியே வராத நிலை உருவாகியுள்ளது.

இதனால் உலக நாடுகளுக்கு ஓரே தீர்வு அமெரிக்க கச்சா எண்ணெய் வாங்குவது தான். ஆனால் ஹார்முஸ்-க்குள் சுமார் 800 எண்ணெய் கப்பல்கள் நின்றுக்கொண்டு இருக்கிறது.

இந்த முடக்க நடவடிக்கை இன்னும் சில மணி நேரங்களில், அதாவது மூன்று மணி நேரத்துக்குள் தொடங்க உள்ளது என அமெரிக்க தரப்பில் தெரிவித்துள்ளது. இந்த முடக்கம் மூலம் ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் எவ்விதமான வர்த்தகமும் செய்ய முடியாத நிலையில் முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அறிவிப்புகளின் தாக்கம்

நெதன்யாகுவின் போர் நிறுத்தம் தொடர்பான எச்சரிக்கையும், டிரம்ப் அறிவித்த ஹார்முஸ் முடக்கமும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு செய்திகளும் மத்தியக் கிழக்கு பகுதியில் ஏற்கெனவே இருக்கும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் எதிரொலியாக WTI கச்சா எண்ணெய் விலை 8 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் 104.3 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் 7.73 சதவீதம் உயர்ந்து 102.5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/netanyahu-warns-iran-ceasefire-could-end-quickly-as-trump-s-strait-of-hormuz-blockade-begins-in-un-789687.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo