விருத்தாசலத்திலிருந்து சட்டசபைக்கு செல்லும் பிரேமலதா? தேமுதிகவினருக்கு அண்ணியார் கொடுக்கும் பரிசு! | Premalatha Vijayakanth Announces Prize: Reward for Highest Votes in Nallur Union Booths

Tamilnadu

oi-Vishnupriya R

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் நல்லூர் ஒன்றியத்தில் எந்த பூத்தில் அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் ஒரு பரிசு பொருளை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக 10 சீட்களில் போட்டியிடுகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் பெற்றுள்ளது. தேமுதிகவின் 21 ஆண்டு கால வரலாற்றில் திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது இதுவே முதல் முறை!

premalatha vijayakanth

2014 ஆம் ஆண்டுக்கு முதல் தேமுதிகவுக்கு சரிவே ஏற்பட்டு வந்த நிலையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் வெளியேறி மாற்றுக் கட்சிகளில் ஐக்கியமாகிவிட்டனர். இனி அரசியல் எதிர்காலமே தேமுதிகவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையிலும் விஜயகாந்த் காலத்தில் இருந்து பயணித்து வருவோருக்கு பிரேமலதா சீட் கொடுத்துள்ளார். இந்த நிலையில் விருத்தாசலத்தில் பிரேமலதாவும், விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிடுகிறார்கள்.

இருவரும் தாங்கல் போட்டியிடும் தொகுதிகளிலும் தேமுதிகவினர் போட்டியிடும் தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அது போல் பிரேமலதா கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் விருத்தாசலம் தொகுதியில் கட்சியினருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். அப்போது சேகர் என்ற நிர்வாகி பேசுகையில், “நல்லூர் ஒன்றியத்தில் 70 பூத்கள் உள்ளன. அதில் எந்த பூத்தில் அதிக வாக்குகளை பெற்று தருகிறார்களோ, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், அண்ணியார் கைகளால் வழங்கப்படும்” என அறிவித்தார்.

இதை கேட்டு சிரித்த பிரேமலதா, சேகர் கையால் யார் ஒரு லட்சம் ரூபாய் வாங்க தயாராக இருக்கிறார்கள், ரெடியா என கேட்டார். அதற்கு தேமுதிகவினரும் மகிழ்ச்சியாக ரெடி என பதில் அளித்தனர். மேலும் பிரேமலதா கூறுகையில், அண்ணி கிட்ட வேறு வேறு கிப்ட் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

என்னை பொருத்தவரை கேப்டனுக்காக பாடுபடுவோருக்கு செயலில் காட்ட விரும்புகிறேன். எனது சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். இனி இந்த தொகுதி மக்களுடன்தான் நான் இருக்க போகிறேன். வீடு பார்க்க சொல்லிவிட்டேன்.

சென்னையில் வேலை இருக்கும் போது அங்கு செல்வேன். இங்கு வேலை இருக்கும் போது வருவேன். விருத்தாசலம் வந்தால் என்னவெல்லாம் வேலை இருக்கிறது என்று பார்த்து, இரண்டு, மூன்று நாட்கள் தங்கி முழுவதுமாக முடித்து விட்டு தான் சென்னை புறப்படுவேன். இவ்வாறு பிரேமலதா தெரிவித்துள்ளார்.

பிரேமலதாவை எதிர்த்து பாமக சார்பில் தமிழரசி போட்டியிடுகிறார். இங்கு அதிமுக சார்பில் வலுவான வேட்பாளர் யாரும் களமிறங்காததால் பிரேமலதாவின் வெற்றி கிட்டதட்ட உறுதி என்கிறார்கள்.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/tamilnadu/premalatha-vijayakanth-announces-prize-reward-for-highest-votes-in-nallur-union-booths-789707.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo