
Cricket
-Mani Singh S
சென்னை: ஐபிஎல் 2026 போட்டி எப்போது தொடங்குகிறது என நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இன்று கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் 20 போட்டிகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும் எந்த அணிகளுக்கு யார் கேப்டன்கள் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
நடப்பு ஐபிஎல் சீசன் 84 போட்டிகளுடன் நடைபெறவுள்ளது. இது கடந்த ஆண்டு நடைபெற்ற 74 போட்டிகளை விட அதிகம் என்பதால், இதுவரை இல்லாத மிகப்பெரிய ஐபிஎல் தொடராக இது அமையவுள்ளது.

இந்த ஆண்டு 84 போட்டிகள்
நடப்புச் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, கடந்த 2025 ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்த முறையும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் 2026 தொடர், வரும் 28 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மார்ச் 28 அன்று தொடங்கி, 84 போட்டிகளுடன் நடைபெறும். இதில், பிளேஆஃப் சுற்று மே 26 அன்று ஆரம்பமாகும். தொடரின் இறுதிப் போட்டி மே 31 அன்று பெங்களூரில் நடைபெறும். முழுமையான போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. 20 போட்டிகள் நடைபெறும் தேதி இடம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 20 போட்டிகள் யார் யாருடன், நடைபெறும் இடம்:
மார்ச் 28 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பெங்களூர் – இரவு 7:30 மணி
மார்ச் 29 – மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை – இரவு 7:30 மணி
மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – குவாஹாத்தி – இரவு 7:30 மணி
மார்ச் 31 – பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – முல்லான்பூர் – இரவு 7:30 மணி
ஏப்ரல் 1 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – லக்னோ – இரவு 7:30 மணி
ஏப்ரல் 2 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா – இரவு 7:30 மணி
ஏப்ரல் 3 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – சென்னை – இரவு 7:30 மணி
ஏப்ரல் 4 – டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – டெல்லி – பிற்பகல் 3:30 மணி
ஏப்ரல் 4 – குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் – அகமதாபாத் – இரவு 7:30 மணி
ஏப்ரல் 5 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஹைதராபாத் – பிற்பகல் 3:30 மணி
ஏப்ரல் 5 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் – இரவு 7:30 மணி
ஏப்ரல் 6 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா – இரவு 7:30 மணி
ஏப்ரல் 7 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் – குவாஹாத்தி – இரவு 7:30 மணி
ஏப்ரல் 8 – டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி – இரவு 7:30 மணி
ஏப்ரல் 9 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா – இரவு 7:30 மணி
ஏப்ரல் 10 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – குவாஹாத்தி – இரவு 7:30 மணி
ஏப்ரல் 11 – பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – முல்லான்பூர் – பிற்பகல் 3:30 மணி
ஏப்ரல் 11 – சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – சென்னை – இரவு 7:30 மணி
ஏப்ரல் 12 – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ – பிற்பகல் 3:30 மணி
ஏப்ரல் 12 – மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை – இரவு 7:30 மணி
இறுதிப் போட்டி எப்போது?
குவாலிஃபையர் 1 மே 26 அன்று பெங்களூரில்ல் நடைபெறும். எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 மே மாத இறுதியில் அகமதாபாத் மற்றும் ராய்ப்பூரில் (அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது) நடைபெறும். இறுதிப் போட்டி மே 31 அன்று பெங்களூரில் நடக்கும்.
பெங்களூர், டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் ராய்ப்பூர் உட்பட 10 முக்கிய நகரங்களில் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த சீசனின் ஐபிஎல் 2026-ல் பங்கேற்கும் அனைத்து 10 அணிகளும், இந்த சீசனுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்ட கேப்டன்களுடன் களமிறங்குகின்றன. அனுபவம் வாய்ந்த இந்திய வீரர்களும், சமீபத்திய சிறந்த இளம் வீரர்களும் இந்தக் கேப்டன்கள் பட்டியலில் உள்ளனர்.
ஐபிஎல் 2026 அணிகளுக்கான கேப்டன்கள்:
* சென்னை சூப்பர் கிங்ஸ் – ருதுராஜ் கெய்க்வாட்
* மும்பை இந்தியன்ஸ் – ஹர்திக் பாண்டியா
* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரஜத் பட்டிதார்
* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஜிங்க்ய ரஹானே
* குஜராத் டைட்டன்ஸ் – சுப்மன் கில்
* ராஜஸ்தான் ராயல்ஸ் – ரியான் பராக்
* லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரிஷப் பண்ட்
* சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – பாட் கம்மின்ஸ்
* டெல்லி கேபிடல்ஸ் – அக்ஸர் படேல்
* பஞ்சாப் கிங்ஸ் – ஸ்ரேயாஸ் ஐயர்
கோப்பை வெல்லுமா சிஎஸ்கே
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஐபிஎல் 2026 அட்டவணையை இரண்டு கட்டங்களாக வெளியிடத் திட்டமிட்டுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தேதிகளையும் இறுதி செய்வதில் அதிகாரிகள் முனைப்புக் காட்டுகின்றனர். எனவே, முதல் 15 நாட்களுக்கான அட்டவணை முதலில் வெளியிடப்பட்டு, மீதமுள்ள போட்டிகளின் அட்டவணை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அறிவிக்கப்படும்.
கோப்பையை கைப்பற்ற இந்த முறை சென்னை அணி தீவிரமாக முயற்சிக்கும் என்றே சொல்லப்படுகிறது. தோனிக்கு கடைசி தொடராக இது இருக்கும் என்று பார்க்கப்படுவதால் கோப்பையை வெல்லுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சன் உள்ளே வந்திருக்கிறார். உலககோப்பை டி.20 போட்டியில் கடைசி 3 போட்டிகளில் அபாரமாக ஆடி தொடர் நாயகன் பட்டம் பெற்ற சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு கூடுதல் பலமாக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2026-schedule-released-full-date-wise-list-of-first-20-matches-announced-011-780573.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
