Iran: 4 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு செல்லும் ஏவுகணை.. அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த ஈரான்! திகைத்த அமெரிக்கா | Iran Missile Test Shocks World: 4000 KM Strike Range Raises Threat to Europe and US Bases

International

oi-Mani Singh S

தெஹ்ரான்: ஈரானிடம் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் ஏவுகணைகள்தான் உள்ளன என்று கருதப்பட்ட நிலையில் அந்த நாட்டிடம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்க கூடிய நடுத்தர வகையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்கலாம் என்று பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா தீவை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த நாட்டின் உண்மையான பலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஈரான், அமெரிக்காவை பழி தீர்க்காமல் விட மாட்டோம் எனக் கூறி தாக்குதலை முன்னெடுத்தது.

Iran Missile Test Shocks World 4000 KM Strike Range Raises Threat to Europe and US Bases

பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்

ஈரான் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கி வருகிறது. மூன்று வாரத்திற்கு மேலாக இந்த போர் நீடித்து வரும் நிலையில், இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஒரு சம்பவத்தை செய்துள்ளது ஈரான். அதாவது, இந்திய பெருங்கடல் நடுவில் அமைந்துள்ளது டியாகோ கார்சியா தீவு.

இது சாகோஸ் தீவுக் கூட்டத்தின் மிகப்பெரிய தீவாகும். டியாகோ கார்சியா தீவு கடந்த 1970-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து-அமெரிக்காவின் கூட்டு ராணுவ தளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ராணுவ தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்த முயற்சித்தது.ஈரான் எல்லைகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள டியாகோ கார்சியா தீவை நோக்கி 2 இடைநிலைத் தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியது.

4 ஆயிரம் கி.மீ தூரம் சென்று தாக்கும்

இதில் ஒரு ஏவுகணை நடுவானிலேயே வழியிலேயே செயல் இழந்துவிட்டதாகவும் மற்றொரு ஏவுகணை, அமெரிக்காவால் இடை மறித்து அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரான் தன்னிடம் இதுவரை 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு பறந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளே தங்களிடம் இருப்பதாக கூறி வருகிறது.

இந்த சூழலில்தான், ஈரானிடம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்லும் ஏவுகணை இருப்பது உண்மயானால் அந்த நாடு, வெளி உலகத்திற்கு அறிவிக்காமல் ரகசியமாக ராணுவ பலன்களை வைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலுக்கு டியாகோ கார்சியா மற்றும் பேர்போர்டில் உள்ள தங்களது ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்காவுக்கு இங்கிலாந்து அனுமதி அளித்த நிலையில் ஈரான் இந்த தளங்களை நோக்கி ஏவுகணை வீசியிருக்கிறது.

லண்டன், பாரிசையும் தாக்க முடியும்

பாலிஸ்டிக் ஏவுகணையின் நடுத்தர வகை ஏவுகணையை ஈரான் சோதித்து பார்க்கலாம் என்று தெரிவிகிறது. இதன் மூலம் ஈரானின் தாக்குதல் வரம்பானது இந்திய பெருங்கடலை தாண்டி, தென் ஐரோப்பா வரை தாக்கும் அளவுக்கு உயர்ந்து இருக்கும் என்று கருதப்படுகிறது. ஈரானிடம் 3,000 – 4,000 கிமீ வரம்புள்ள ஏவுகணைகள் இருந்தால், லண்டன், பாரிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களையும் தாக்க முடியும் என்று பாதுகாப்பு துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஈரானின் இந்த தாக்குதலினால், அந்த நாட்டின் உண்மையான ராணுவ பலம் என்னவென்றே தெரியாத நிலை உள்ளது. ஏற்கனவே அமெரிக்காவின் எப்35 போர் விமானத்தை ஈரான் தாக்கி உலக நாடுகளை திகைக்க வைத்த நிலையில், தற்பொது 4 ஆயிரம் கிலோ மீட்டர் வரை செல்லும் ஏவுகணையை பயன்படுத்தியிருப்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

இதற்கிடையே, ஈரானில் தங்கள் இலக்குகளை அமெரிக்கா அடைந்து இருப்பதால், போரை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார். மோதல் இன்னும் உக்கிரம் அடையுமா இல்லை. சண்டை நிறுத்தம் ஏற்படுமா? என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/iran-missile-test-shocks-world-4000-km-strike-range-raises-threat-to-europe-and-us-bases-783305.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo