
Cricket
-Mani Singh S
சென்னை: 13 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா அணி 220 ரன்கள் குவித்திருந்தும் அதனை அசால்டாக முறியடித்தது. குறிப்பாக ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அவர்களது ரசிகர்களுக்கு விருந்து படைத்தது என்றே சொல்லலாம். இந்த நிலையில் தான், நெட்டிசன்கள் பலரும் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தை வைத்து மீம்ஸ்களை பறக்க விட்டுள்ளார்கள்.
குறிப்பாக ரஜினியின் கபாலி பட டயலாக்கை பகிர்ந்து 5 வருஷத்திற்கு முன்னாடி மும்பை இந்தியன்ஸ் எப்படி போனோமோ அதே அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு.. எம்.ஐ.டா என சிலர் ஃபயர் விட்டு இருந்தனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த இந்த இரு அணிகள் மோதியதால் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீசியது.
முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டியது. துவக்க வீரர் ரோகித் சர்மா 38 பந்துகளில் 78 ரன்கள் அடித்து பறக்க விட்டார். 6 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் என ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
Ipl fans after witnessing Mumbai Indians winning 1st match:#MIvsKKR pic.twitter.com/oePoRGwotZ
— Tanishq Ganu (@smart__leaks) March 29, 2026
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது மும்பை இந்தியன்ஸ். முதல் போட்டியே அமர்க்களமாக மும்பை இந்தியன்ஸ் தொடங்கிய நிலையில், அந்த அணியின் ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். 13 ஆண்டுகளாக ஐபிஎல் முதல் போட்டிகளில் தோற்றுவந்த மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ரோகித் சர்மா உடல் எடையை குறைத்து 10 வயது குறைந்தவர் போல ஆகிவிட்டதாக அவரது ரசிகர்கள் மீம்ஸ்களை போட்டு புளகாங்கிதம் அடைந்த நிலையில் நேற்று ரோகித் ஆடிய ருத்ரதாண்டவமும் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதையடுத்து, எக்ஸ், இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.
Thalaivan 1st Match Fifty +200 SR la @ImRo45 🥳💥 #MumbaiIndians #MIvsKKR pic.twitter.com/FbwseBNbCu
— Dr.TNR 𝙃𝙖𝙧𝙙𝙞𝙣 ヅ♡ MI (@TNROfficial_) March 29, 2026
முதல் மேட்ச்சே சம்பவம் பண்ணீட்டிங்க ரோகித். இந்த ஐபிஎல்-லில் நாங்க மறுபடியும் பார்முக்கு வந்து யாருன்னு காட்டுறோம் என்று நெட்டிசன் பகிர்ந்துள்ளார். கடைசியாக மும்பை இந்தியன்ஸ் 2020 -ல் ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன்பிறகு இதுவரை கோப்பை வென்றது இல்லை.
இதனால் இந்த முறை எப்படியாவது கோப்பை வெல்லுவோம் என்று சொல்வது போல நெட்டிசன்கள் இப்படி பதிவை போட்டுள்ளனர். மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில் நீண்ட காலத்திற்கு பிறகு இப்படி ஒரு முதல் மேட்ச் எங்களுக்கு கிடைத்துள்ளது என்று பதிவிட்டு இருந்தார்.

மற்றொரு நெட்டிசன், ரஜினியின் கபாலி பட டயலாக்கை பகிர்ந்து 5 வருஷத்திற்கு முன்னாடி மும்பை இந்தியன்ஸ் எப்படி போனோமோ அதே அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு.. எம்.ஐ.டா என்று ஃபயர் விட்டு இருந்தார்.
Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/sports/cricket/mumbai-indians-script-stunning-ipl-comeback-rohit-sharma-blitz-sparks-meme-fest-011-785521.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.
