Saudi Arabia: பொறுமைக்கும் எல்லை இருக்கு.. ஈரானை பகிரங்கமாக எச்சரித்த சவுதி! திருப்பியடிக்க முடிவு? | Saudi Arabia Warns Iran Amid Rising Tensions – Patience Has Limits

International

-Mani Singh S

ரியாத்: ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. ஈரான் தனது யுக்தியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.. தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு ‘மிக முக்கியமான திறன்களும் சக்திகளும்’ சவுதி அரேபியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் உள்ளன என்றும் எச்சரித்ததுள்ளது.

ஈரான் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தின. கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி இந்த போரில் கொல்லப்பட்டார்.

Saudi Arabia Warns Iran Amid Rising Tensions - Patience Has Limits

பொறுமைக்கும் எல்லை உண்டு

இதனால், கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் கடுமையாக தாக்கி வருகிறது. ஏவுகணைகள், கிளஸ்டர் குண்டுகளை வீசி ஈரான் தக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கி வருவதால் மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் நீடித்து வருகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருப்பதாக சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரை நோக்கி ஈரான் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்க முயன்றதாகவும் இவற்றை ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் இடை மறித்து அழித்ததாகவும் சவுதி அரேபியா கூறிய நிலையில், தங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு என்று ஈரானை எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியா குற்றச்சாடு

இது தொடர்பாக சவுதி கூறுகையில், சவுதி மற்றும் பிற வளைகுடா நாடுகளின் பொறுமைக்கும் ஓர் அளவு உள்ளது. இந்த தாக்குதல்கள் வெளிப்படையான மிரட்டல் முயற்சியாகும் என்று சவுதி அரேபியா குற்றம்சாட்டியது. மேலும், ஈரான் தனது யுக்தியை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு ‘மிக முக்கியமான திறன்களும் சக்திகளும்’ சவுதி அரேபியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் உள்ளன என்றும் எச்சரித்ததுள்ளது.

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/international/saudi-arabia-warns-iran-amid-rising-tensions-patience-has-limits-011-782673.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo