SC, ST இட ஒதுக்கீடு இரண்டு மடங்கு உயர்வு.. மாநில அரசு எடுத்த மிக முக்கியமான முடிவு | Reservation increased in Odisha: State govt Doubles SC-ST Quota In Medical And Engineering Seats

India

-Vigneshkumar

பாட்னா: இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மக்கள்தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பினருக்கும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் உரிய வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்போது இந்த மாநிலத்தில் பட்டியலின, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அனைத்து சாதியினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரியப் பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்ய இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இதன் கீழ் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் இருக்கும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப இட ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது.

Reservation increased in Odisha State govt Doubles SC-ST Quota In Medical And Engineering Seats

இட ஒதுக்கீடு

இதற்கிடையே ஒடிசா மாநிலத்தில் மருத்துவ, பொறியியல் மற்றும் உயர் தொழில்நுட்பக் கல்விப் படிப்புகளில் பட்டியலின (SC), பழங்குடியின (ST) மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு தனது இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் செய்த முக்கிய மாற்றங்கள் காரணமாகவே இட ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. சனிக்கிழமை இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒடிசாவின் பாஜக அரசு இந்த முக்கிய முடிவை எடுத்தது. பட்டியலின, பழங்குடியின இட ஒதுக்கீட்டு உயர்த்தப்பட்டுள்ளதோடு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இரண்டு மடங்கு உயர்வு

அதன்படி பழங்குடியின மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 12 சதவீதத்தில் இருந்து 22.50 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அதேபோல பட்டியலின மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 8 சதவீதத்தில் இருந்து 16.25 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேபோல ஓபிசி பிரிவினருக்கு அங்கு இதுவரை எந்தவொரு இட ஒதுக்கீடும் வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு SEBC அதாவது சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் என்ற பெயரில் புதிதாக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினருக்கு 11.25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50%க்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒடிசா முதல்வர் தகவல்

இந்த புதிய இட ஒதுக்கீடு தொடர்பான தகவல்களை அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தச் சலுகை பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கம்யூட்டர் சயின்ஸ், மருத்துவ அறுவை சிகிச்சை, பல் மருத்துவம், செவிலியர் படிப்பு, மருந்தகம் மற்றும் அதைச் சார்ந்த சுகாதார அறிவியல் துறைகள் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் ஐடிஐக்கள், பாலிடெக்னிக்குகளில் அமல்படுத்தப்படும். மேலும், கால்நடை அறிவியல், ஆயுர்வேதம், ஹோமியோபதி, விவசாயம், கட்டிடக்கலை, திட்டமிடல், திரைப்படம் மற்றும் அது சார்ந்த கலைப் படிப்புகளுக்கும் புதிய இட ஒதுக்கீட்டுக் கொள்கை பொருந்தும்

இட ஒதுக்கீடு அறிமுகம்

மக்கள் தொகை கணக்கீடு உடன் ஒப்பிடுகையில் பழங்குடியினர், பட்டியலின மாணவர்களுக்கு போதிய இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதேபோல SEBC மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்தது. சமூக நீதி மற்றும் இந்த சமூக மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் இது தடையாக இருந்தது. முந்தைய அரசுகளும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், நாங்கள் அதை மாற்றிக் காட்டியுள்ளோம். பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி உரிமைகளை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்ததில் மகிழ்ச்சி” என்றார்.

அதிகரிப்பு

ஒடிசா மாநிலத்தில் இப்போது 2,421 இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் முன்பு பழங்குடியின மாணவர்களுக்கு 12% அதாவது 290 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், அது இப்போது 545ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பட்டியலின மாணவர்களுக்கு 8 சதவீத இட ஒதுக்கீட்டில் 193 ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில், அது இப்போது 393ஆக உயர்ந்துள்ளது. அதேபோல புதிதாக இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கு (SEBC) மருத்துவப் படிப்புகளில் 272 இடங்கள் ஒதுக்கப்படும்.

இதேபோல், மொத்தம் உள்ள 44,579 பொறியியல் இடங்களில், பழங்குடியினருக்கு 10,030, பட்டியலினத்தவருக்கு 7,244 மற்றும் சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினருக்கு 5,015 இடங்கள் பதிவு செய்யப்படும். தற்போதைய கொள்கையின்படி, பழங்குடியினருக்கு 5,349 மற்றும் பட்டியலினத்தவருக்கு 3,566 இடங்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது..

Disclaimer: This content was automatically imported from a third-party source via RSS feed. The original source is: https://tamil.oneindia.com/news/india/reservation-increased-in-odisha-state-govt-doubles-sc-st-quota-in-medical-and-engineering-seats-011-787281.html. xn--babytilbehr-pgb.com does not claim ownership of this content. All rights remain with the original publisher.

We will be happy to hear your thoughts

Leave a reply

Babytilbehør
Logo